பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்த அறிவிப்பு..!

0

நாட்டில் கொரோனா வைரஸ் முற்றாக கட்டுப்படுத்திய பின்னரே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார்.


அத்துடன் நாட்டில் உள்ள 582 பாடசாலைகளில் கை கழுவுவதற்குக் கூட தண்ணீர் வசதி இல்லை என்றும் அவர் கூறினார்.


அத்துடன் 800க்கும் அதிகமான பாடசாலைகளில் முறையான கழிவறைகள் இல்லை எனவும் குறிப்பிட்ட அவர் இந்நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது கடினம் என்றும் இவற்றை ஆராய உத்தரவிட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.