வெள்ளை வான் விவகாரம்; 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் ராஜித..!

0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்த நிலையில் இன்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.


அவரை வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.


வெள்ளை வேன் செய்தியாளர் மாநாடு தொடர்பில் அவருக்கு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் வழங்கப்பட்ட பிணை இன்று மேல் நீதிமன்றத்தால் ரத்துச் செய்யப்பட்ட நிலையில் சரணடைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.