இளம் ஊடகவியலாளரின் மரணம் கிழக்கு தமிழ் சமுகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு..!

0

திருகோணமலை மாவட்டத்தில் ஊடகத் துறையில் தமிழரின் பிரசங்கம் குறைந்து தமிழ்மொழி ஊடகங்களில் வேற்று இன ஊடகவியலாளர்கள் ஆதிக்கம் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்றைய விபத்தில் ஊடகவியலாளர் மிதுன் போன்ற துடிப்புள்ள இளைஞர்களின் உயிரிழப்பு கவலைக்குரியது.


யுத்த காலத்தில் சுகிர்தராஜன் உயிரிழந்தார் அதனை தொடர்ந்து BBc தமிழோசை மூத்த ஊடகவியளாளர் அச்சுறுத்தலால் அவரது பங்களிப்பு குறைந்தது.

அதனை தொடர்ந்து திருமலையில் தமிழ் ஊடகவியலாளர்கள் பிரசன்னம் குறைந்து வரும் நிலையில் தற்போதே பெயர் குறிப்பிடும் படியாக இளம் ஊடகவியலாளர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர்.


திருகோணமலையைச் சேர்ந்த 28 வயதுடைய ஊடகவியலாளர் மிதுன் என்று அழைக்கப்படும் ஈ.மிதுன்சங்கர் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்ப்பு பெரியகல்லாறு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளுடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் இவ் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.


உயிரிழப்பில் ஆராத்துயரில் உள்ள குடும்பத்தாருக்கு எமது ஆறுதலைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்.