பிரதமர் மஹிந்தவை இன்று இரவு சந்திக்கும் சுமந்திரன்; தேர்தல் கால பித்தலாட்டம் ஆரம்பம்..!

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு இன்றிரவு 7 மணிக்குப் பின்னர் இடம் பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலேயே பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.


இந்த சந்திப்புக்குக்கு நேற்றைய தினம் நேரம் ஒதுக்கி கேட்கப்பட்டிருந்த நிலையில், இன்றிரவு 7 மணிக்குப் பின்னரே, நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், இடம் பெற்ற சந்திப்பின் போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான விவகாரம் விரிவாக பேசப்பட்டது.


எனினும், தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் அடங்கிய ஆவணங்களை பிரதமர் மஹிந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்டிருந்த நிலையில்,

அந்த ஆவணங்களை கையளித்துவிட்டு, கைதிகளின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடுவதற்கே, மஹிந்தவை சுமந்திரன் சந்திக்கவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


இதேவேளை கடந்த 52நாள் குழப்பத்தின் போதும், தற்போது ஜனாதிபதி பதவியேற்ற போதும் இணைந்து செயற்பட அழைப்பு விடப்பட்டது.

அப்போது ரணிலுக்கு முட்டுக் கொடுத்த சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு தற்போது தேர்தல் நாடகங்கில் இறங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.