சமூக ஆர்வலர் சஜீவனால் முல்லைத் தீவில் மனிதாபிமான உதவிகள் வழங்கி வைப்பு..!

0

சமூக ஆர்வலர் சஜீவனால் முல்லைத் தீவில் மனிதாபிமான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

டென்மார்கை சேர்ந்த து.செல்வக்குமார், செ.ஜெகதாசன், இ.வசிதரன், ம.மதனராஜா, சி.சிறீதரன், ஜ.சிவனேசன்.இ.இராசகுமார் ஆகியோரின் நிதியில் குறித்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


தாயகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலமையில் தொழிலுக்கு செல்ல முடியாமல் சிரமப்படும் குடும்பங்களுக்கு உதவி வழங்குமாறு தாமாக முன்வந்து அதற்கான குறித்த நிதியினை உடனடியாக அனுப்பியிருந்தார்கள்.


அவர்கள் இணைந்து வழங்கிய நிதிப் பங்களிப்பில் ஊரடங்கு சட்ட நடைமுறை காரணமாக முள்ளிவாய்க்கால் கிழக்கில் தொழிலின்றி சிரமப்படும் 54 குடும்பங்களுக்கு உலர்உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.குறித்த உதவியை தாமாக முன்வந்து வழங்கிய புலம்பெயர் உறவுகளுக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.