பிரபாகரனின் போராட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது; ஒரு இலட்சம் வாக்கில் வெற்றி..!

0

சுதந்திரம் கிடைத்தது முதல் இதுவரை தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கவில்லை. அத்துடன் விடுதலைப் புலிகளின் தேவைக்காக கூட்டமைப்பு தோற்றம் பெறவில்லை எனவும் பிரபாகரனின் போராட்டத்தை ஏற்க முடியாது எனவும் அக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியை மேற்கோள் காட்டி தமிழ் ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்படுள்ளதாவது,

சுதந்திரம் கிடைத்தது முதல் இதுவரை தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் தேவைக்காக தோற்றம் பெறவில்லை.

தற்போது கூட்டமைப்பில் மூன்று கட்சிகளே உள்ளன காலத்துக்கு காலம் சில கட்சிகள் வருவார்கள் போவார்கள். கூட்டமைப்பை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கும் எந்தவித எண்ணமும் இல்லை. இரா.சம்பந்தனே கூட்டமைப்பின் உண்மையான தலைவர்.


கூட்டமைப்பை நிர்வகிப்பது அவர் மாத்திரமே என்பதை தெளிவாக கூறுகின்றேன். என்னை கூட்டமைப்பின் தலைவர் என கூறுவதை நிராகரிக்கின்றேன். இலங்கையில் அனைத்து இன மக்களும் எந்தவித பாகுபாடும் இன்றி வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம், மாறாக நான் இனவாதியல்ல.

தற்போது வரையில் எனது அரசியல் தலைவர் சம்பந்தன் மாத்திரமே. ஆரம்பத்தில் ஜே.வி.பியோடு இணைந்து செயற்பட்டேன் என்பதற்காக தற்போது எனது தலைவர் அநுரகுமார திசாநாயக்க என கூற முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாகிய போது, தமிழர் அரசியலின் ஏக போகமாகவோ, அதைத் தீர்மானிக்கும், கொண்டு நடத்தும் பலமான சக்தியாகவோ அது இருக்கவில்லை.


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இரண்டாம் பட்சமான, விடுதலைப் புலிகள் பங்கு பெறாத, பங்கு பெறுவதைத் தவிர்த்த ஜனநாயக அரசியல் வௌியை நிரப்புவதற்கு, ‘தமிழ்த் தேசியத்தின்’ அடிப்படைகளை முன்னிறுத்திய கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்.

அது, எதிரெதிர் துருவங்களாக நின்ற அரசியல் கட்சிகளையும் ஜனநாயக அரசியலில் ஈடுபட்டு வந்த ஆயுதக் குழுக்களையும் ஒன்றிணைத்த மிக முக்கிய சந்தர்ப்பமாகும்.

இதேவேளை பெளத்த அடிப்படைவாதிகளாக செயற்படும் ஜேவிபியுடன் இணைந்து செயற்பட்டதை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் சட்டத்தின் மூலம் 2006ல் வட கிழக்கு பிரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.


அத்துடன் சுமந்திரன் வடகிழக்கு ஒருபோதும் இணையாது, இணைக்க முடியாது என்று பகிரங்கமாகவே கூறி வருகின்றார். ஆக பிரிப்பின் பின்னணியில் சுமந்திரன் உள்ளாரோ என எண்ணத் தோன்றுகின்றது.

வடக்கில் அரசுக்கு எதிராக தமிழ் தேசியம் பேசியபடி முரண்பட்ட அரசியலை செய்து வரும் சுமந்திரனுக்கு இம்முறை ஒரு இலட்சம் யாழ் மக்களின் வாக்கு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எனவே வாக்கை வழங்க வேண்டுமா அல்லது நிராகரிக்க வேண்டுமா என யாழ் மக்கள் தீர்மானிக்கட்டும்.