டுபாயிலிருந்து சர்ஹானுடன் தொடர்புடைய பத்துக்கும் மேற்பட்டவர்கள் நாட்டுக்குள் வருகை..!

0

கொரோனா காரணமாக டுபாயில் இருந்து அண்மையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் சிலரை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் (சிஐடி) திட்டமிட்டுள்ளனர்.


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை முன்னெடுத்த தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமின் சர்வதேச வலையமைப்பில் இவர்கள் தொடர்புபட்டுள்ளார்கள் என்று என்று சிஐடி தகவல்கள் தெரிவிக்கின்றன.


இவர்கள் தொடர்பில் முன்னரே டுபாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரிய வருகிறது.

இந்நிலையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் தனிமைப்படுத்த நிலையம் ஒன்றில் தீவிர பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


இதன்படி தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பின்னர் இவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பத்துக்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் இருப்பதாக சிஐடி தகவல்கள் தெரிவிக்கின்றன.