நாளை முதல் கடும் கட்டுப்பாடுகள்; எச்சில், வெற்றிலை துப்பவும் தடை..!

0

நாளைய தினம் நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில், நாளை முதல் கடும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என விசேட வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.


சுகாதார கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரம் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, பொது இடங்களில் எச்சில் துப்புவது, வெற்றிலை உமிழ்ந்து துப்புவது என்பன தடை செய்யப்படவுள்ளன.

அதேபோல தனியார் நிறுவனங்கள் கொண்டிருக்கக் கூடிய கட்டுப்பாடுகள், மருந்தகங்களுக்கான விதிமுறைகள் என்பனவும் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.