பாடசாலைகளை எப்போது ஆரம்பிப்பது? கல்வி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவிப்பு..!

0

பாடசாலைகளை எப்போது திறப்பது என்பது தொடர்பாக அடுத்த வாரத்திலேயே தீர்மானிக்கப்படுமென கல்வி அமைச்சர் டளஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறை நகரில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.


பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அடுத்த வாரத்தில் தீர்மானம் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து அமைச்சர் பல கட்டங்களின் கீழ் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டும் என்பதுடன்,


முதல் கட்டத்தில் கீழ், ஆரம்ப வகுப்பு மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைக்க எதிரபார்க்கவில்லை என்று தெரிவித்த அமைச்சர் உள்ளுராட்சி மன்றங்களின் உதவிகளை பெற்று சகல பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.


இதன் பின்னர் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையின் பின்னர் அதாவது நான்கு நாட்களுக்குப் பின்னர் ஆசிரியரகள் அதிபர்களை அழைத்து பாடங்களுக்கான நேர அட்டவணையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.


அதன் பின்னரே பாடசாலைகளை மீள ஆரம்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.