பல்கலைக் கழகங்கள் திங்கள் முதல் ஆரம்பம்; பாடசாலைகள் தற்போது சாத்தியம் இல்லை..!

0

எதிர்வரும் திங்கட்கிழமை 11ஆம் திகதி தொடக்கம் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக் கழக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட சில அதிகாரிகள், பணியாளர்களை வேலைக்கு அமர்த்த பல்கலைக் கழக நிர்வாகங்களுக்கு பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன் மாணவர்களுக்கான போதனை நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து இன்னும் அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.