பாராளுமன்ற பொதுத் தேர்தல் மீண்டும் ஒத்தி வைக்கப்படும் சாத்தியம்..!

0

இலங்கையின் பொதுத் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்தி வைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக் குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் இரண்டாவது வாரமளவில் பொதுத் தேர்தலுக்கான திகதி மீளக் குறிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இதற்கு முன்னதாக தேர்தல்கள் ஆணைக்குழு , சுகாதாரத் துறையிடம் இருந்து நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அறிக்கை ஒன்றைக் கோரவுள்ளது.


இதேவேளை கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறும், பொதுத் தேர்தலுக்கான திகதியை வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யும்படியும் கோரி பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது


இதேவேளை யூலை 17க்குப் பின்னர் தேர்தல் நடைபெறுமாயின் 60 க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான ஓய்வூதியத்தைக் கோரவுள்ளதுடன் அதற்கான சட்ட நடவடிக்கைகளுக்கும் தயாராகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.