கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்திட முடியாது என்றல் உடன் பதவி விலகுங்கள்..!

0

நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தனக்கு கிடைத்த முதலாவது சந்தர்ப்பத்திலேயே தனது பதவியை இராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சின் செயலாளராக ஆட்டிகல பெயரிடப்பட்டிருந்தாலும், நிதி அமைச்சின் விவகாரங்கள் தொடர்பான அனைத்து முடிவுகளும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர மற்றும் ஆர்.பிரேமசிறி ஆகியோரினால் மேற் கொள்ளப்படுவதே இதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.


2015ம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றத்துடன் இலங்கையில் இருந்து நீங்கி சென்ற சீன நிறுவனங்களின் தலைவர்கள் கடந்த மாதங்களில் மீண்டும் வந்துள்ளதுடன் அவர்கள் அடிக்கடி நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தில் அலைவதை காணக் கிடைத்துள்ளது.

சீனா எக்ஸிம் வங்கியிடமிருந்து கடன் பெற்று தயார் படுத்தப்பட்ட பல ஒப்பந்தங்களை ஆரம்பிப்பதற்கு தயார் நிலையில் இருப்பதுடன் இவற்றின் முக்கிய நிபந்தனை கட்டுமானத்தை சீன நிறுவனங்களிடம் ஒப்படைப்பதுதான்.


டெண்டர்களை அழைக்காமல் சீன நிறுவனங்களுக்கு வழங்க நெடுஞ்சாலை அமைச்சு ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளது.

எவ்வித கலந்துரையாடலிலும் நிதி அமைச்சின் செயலாளர் கலந்து கொள்ளவில்லை என்றும் ஆவணங்களில் கையெழுத்திட மாத்திரம் அவற்றை அவருக்கு வழங்கிய போது சட்ட விரோத கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்கு கையெழுத்திடுவது அவரினால் நிராகரிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


எவ்வாறாயினும் இதற்கு பதிலளித்துள்ள பி.பி.ஜயசுந்தர இந்த ஆவணங்களுக்கு கையெழுத்திட இயலாது என்றால் பதவி விலகுமாறும் அந்த பதவிக்கு நியமிக்க தேவையான அளவு நபர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே முன்னாள் நிதி அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் ரவி கருணா நாயக்க ஆகியோருக்கு அரசாங்கத்தின் உள்ளக தகவல்களை வழங்குவது ஆட்டிகல எனவும், அவர் ரவியின் உறவினர் எனவும் ஜயசுந்தர மேலுமொரு குற்றமொன்றை சாட்டியுள்ளார்.


சட்ட விரோதமாக டெண்டர் பரிவர்த்தனைகளுக்கு உரிய டெண்டர் வழங்கப்படாமல் ஒப்புதல் அளிக்கப்பட்டால் ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டால் அவர் பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவில் இருக்க வேண்டியது தவிர்க்க முடியாதது என ஆடிக்கலவின் நெருங்கிய நண்பர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.