முள்ளிவாய்க்காலில் மக்கள் மீது போலீசார் தாக்குதல்; முறைப்பாடு பதிவு செய்யவும் மறுப்பு..!

0

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியை சேர்ந்த 3 நபர்கள் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.


குறித்த நபர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்ய முல்லைத்தீவு பொலிசார் மறுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,


முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் சிலர், ஒரு நபருடைய பெயரைக் கேட்டு அவர் எங்கே என்றும் அவரைக் கொண்டு வந்து உடனடியாக ஒப்படைக்குமாறு கோரியே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.


குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர்கள் 1990 நோயாளர் காவு வண்டி மூலமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.


பொலிஸாரின் இந்த நடவடிக்கையினால் அப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதுடன் பொது மக்களை தாக்கிய பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.