மக்களின் சுகாதாரத்தை சவாலுக்கு உட்படுத்தும் கோழி, மீன் வீதிகளில் விற்பதற்கு தடை..!

0

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் 11ம் திகதி (11.05.2020) தொடக்கம் சில நடைமுறைகளை அமுல்ப்படுத்தவுள்ளதாக வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.

நடைமுறைப்படுத்தவுள்ள புதிய நடைமுறை தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நகரசபை தலைவர்,

கொரோனா வைரஸ் அச்சத்தினையடுத்து ஊடரங்கு தளர்த்தப்படும் சமயங்களில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வவுனியா நகரில் பல பகுதிகளில் விசேட இடங்கள் ஒதுக்கப்பட்டு பரவலான முறையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தோம்.


தற்போது மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுவதினால் வீதியோரங்களில் மரக்கறி வியாபாரம் செய்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்குவதுடன் கோழி, மீன், அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்வதற்குரிய அனுமதிகளை எதிர்வரும் 11ம் திகதியுடன் நிறுத்தப்படும் என்பதுடன்,


மேலும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் மரக்கறிகளை கொரோனா வைரஸ் கட்டுப் பாட்டுக்குள் வரும் வரை வீதியோரங்களில் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.


இதேவேளை வீதியோரங்களில் மீன், கோழி போன்றன விற்பனை செய்யப்படுவதால் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.