சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே; அருந்தவபாலன் தெரிவிப்பு..!

0

கொழும்பு வாழ்க்கை, மேட்டுக் குடிப் பின்னணி, தமிழ் மக்களுக்கு நன்றாக அறிமுகமான முகம், போதாக்குறைக்கு சிங்கள மணவுறவு போன்றவற்றை வைத்து தங்களைப் போல தமிழ் மக்களை ஏமாற்ற பெரிதும் பொருத்தமானவர் என நம்பிய சம்பந்தன் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தது உண்மையே.


ஆனால் தமிழ் மக்கள் விக்னேஸ்வரனிடம் ஏமாறவில்லை. அவரும் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை.

சம்பந்தன் எதிர்பார்த்தது போல,

* தேர்தல்களில் குறிப்பாக மாகாண சபைத் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அவர் கைவிடவில்லை

* ஒற்றையாட்சியை சமஸ்டி என்றும் ஒற்றை ஆட்சிக்குள் சமஸ்டி உள்ளது என்றும் கூறி மக்களை ஏமாற்றவில்லை.


* மாகாண சபையில் இனப் படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றாது விடவில்லை

* பதவி, பணம், சுக போகங்களுக்காக விலை போகவில்லை

* சர்வதேசத்தில் இலங்கையரசைப் பிணை எடுப்பதற்கு துணை நிற்கவில்லை.

* கணக்கெதுவும் காட்டாத கட்சிக்காக வெளிநாட்டில் நிதி சேகரிக்கப் போகவில்லை

* இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் திருகுதாளங்களை மறைப்பதற்குத் துணை போகவில்லை. என்பதனால் விக்னேஸ்வரனிடம் சம்பந்தர் ஏமாந்தது உண்மையே.


விக்னேஸ்வரன் தான் சொன்னதுக்கு மாறாக தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக மாற்றவில்லை.

பேரவை வேறு. தமிழ் மக்கள் கூட்டணி வேறு. இக் கட்சி கூட தமிழ் மக்களின் வேண்டு கோளைப் புறந்தள்ள முடியாது உருவாக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு நேர்மையாக இருந்திருந்தால் இக் கட்சி தோன்ற வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

மேலும் நல்லாட்சியிடம் சம்பந்தன் ஏமாறவில்லை எனச் சுமந்திரன் சொல்வது உண்மையானால் ஏமாந்து விட்டோம் என அவரது தலைவர் உட்பட அவரது கட்சியினர் சொன்னது பொய்யா?


அவரது கட்சியினர் சொன்னது பொய்யானால் சுமந்திரனும் சம்பந்தனும் எமது மக்களை மட்டுமல்ல அவரது கடசியினரையும் ஏமாற்றியது உண்மையாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழரசுக் கட்சியின் ஒருசில முகநூல் போராளிகள் அருந்தவபாலனுக்கு எதிராக வசை பாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.