வவுனியா கனகராயன் குளத்தில் குடிமனைக்குள் புகுந்த யானை அட்டகாசம்..!

0

வவுனியா கனகராயன் குளம் பெரியகுளம் பகுதியில் பகல் நேரத்தில் குடியிருப்புக்குள் வந்த யானையால் மக்கள் மத்தியில் அச்சமான நிலை ஏற்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் தனது காணியில் யானை ஒன்று நிற்பதை அவதானித்ததுடன், கனகராயன்குளம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தார்.


சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயன் குளம் பொலிசார் வனஜீவராசிகள் திணைக் களத்திற்கும் தகவல் தெரிவித்திருந்தனர்.
யானைவெடிகள் மற்றும் துப்பாக்கிகளுடன் சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த யானையை அப்பகுதியில் இருந்து அகற்றி காட்டுப் பகுதிக்குள் விட்டிருந்தனர்.


அந்த பகுதியில் யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் விவசாய உற்பத்திகள் அழிவடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த யானைகள் கடந்த காலத்தில் தென் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு இப் பிரதேசங்களில் விடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.