அயல் வீட்டாருடன் முரண்பாடு; வவுனியாவில் இளைஞன் வைத்திய சாலையில் அனுமதி..!

0

வவுனியா, செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் இளைஞர் மீது அயல் வீட்டார் நேற்று மாலை மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இரு தரப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக இருந்த கருத்து முரண்பாடு காரணமாக குறித்த இளைஞன் மீது அயல் வீட்டார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.


தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞன் செட்டிக்குளம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.