எந்த ஊழியரையும் பணியிலிருந்து நீக்கவோ சம்பளத்தை குறைக்கவோ அனுமதி இல்லை..!

0

நாட்டில் தற்போதைய பொருளாதார சூழ்நிலையிலும் பணியாளர்களை பணியிலிருந்து நீக்குதல் மற்றும் சம்பளக் குறைப்பு மேற்கொள்ளல் என்பனவற்றுக்கு அனுமதியளிக்கப் படாது என தொழில் அமைச்சின் செயலாளர் சரத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.


பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் முத்தரப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற் சங்கங்கள், தொழில்தருனர் மற்றும் தொழில் திணைக்களம் ஆகிய மூன்று தரப்புக்களும் இணைந்து இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.


அநேக நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்பட்டுள்ள போதிலும் பணியாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இடமளிக்கப்பட முடியாது என சரத் அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த குழுவின் தலைவராக தொழில் அமைச்சர் கடமையாற்றுவதுடன் குழுவின் பரிந்துரைகள் விரைவில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.


இதேவேளை ஜனாதிபதியின் செயலாளரது கருத்தானது அவரது தனிப்பட்ட கருத்து என்பதுடன் அவ்வாறு மே மாதச் சம்பளத்தில் கை வைத்தால் பல்வேறு சங்கங்களும் சட்ட நடவடிக்கையில் இறங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.