ஸ்ரீலங்காவிற்கு மனிதாபிமானத்தைக் காட்டிய தமிழீழ விடுதலைப் புலிகள்..!

0

சுனாமியால் இலங்கை பாதிக்கப்பட்டிருந்த போது விடுதலைப் புலிகளில் எவ்வித தாக்குதல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


இந்நிலையில, கொரோனா வைரஸ் தொற்றுக்கு நாடு முகம்கொடுத்துள்ள நிலையில், எதிர்க் கட்சிகள் அரசியல் இலாபம் ஈட்ட முற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,


சுனாமியால் இலங்கை பாதிக்கப்பட்டிருந்த போது படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் எவ்வித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை. இது அரசாங்கத்திற்கு சாதகமாக அமைந்தது எனத் தெரிவித்திருந்தார்.


இதேவேளை குறித்த சம்பவம் நிகழ்ந்து நான்கு வருடங்களுள் அரசு  மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் வலிந்து யுத்தத்தை ஆரம்பித்து பாரிய மனிதப் பேரவலத்துடன் யுத்தத்தை நிறைவு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.