இலங்கையில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரிப்பு..!

0

இலங்கையில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.


கொழும்பு 15, மோதரை (முகத்துவாரம்) பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 62 வயதுடைய பெண்மணி ஒருவர் அடையாளம் காணப்பட்டார். குறித்த அடையாளம் காணப்பட்ட பெண்மணி உயிரிழந்தார்.


இதனால் அவர் பழகியவர்கள் பலரை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


இதேவேளை கொலன்னாவையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர் சிகிச்சை பெற வந்த கொழும்பு பெரியாஸ்பத்திரியின் 45 ஆம் இலக்க வார்ட் தற்காலிகமாக மூடப்பட்டது.


கிருமிநாசினி தெளித்து பின்னர் அது திறக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.