கொழும்பு ராஜகிரிய மற்றும் கொலன்னாவயில் கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிப்பு..!

0

கொலன்னாவ, சாலமுல்ல பகுதியில் போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இதனையடுத்து அவர் பழகிய 26 பேர் வவுனியா கண்டைக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.


இதேவேளை ராஜகிரிய , பண்டாரநாயக்கபுர பகுதியில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.


இதன்படி ராஜகிரிய, கொலன்னாவ பகுதிகளில் இருந்து மொத்தமாக 56 பேர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ராஜகிரியவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர் ஓட்டோ சாரதியாவார்.


இதுவரை 755 கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.