இரண்டாம் கட்டமாக ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க ஏற்பாடு..!

0

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட குழுக்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு இரண்டாம் கட்டமாக வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


2020 ஏப்ரல் மாதம் மேற்படி கொடுப்பனவு கிடைக்கப் பெற்ற நிலையான நன்மை பெறுனர்கள் ஆவணம், முன்னுரிமை ஆவணம் மற்றும் கிராமிய குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட நன்மை பெறுனர்கள் ஆவணம் ஆகிய ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள நன்மை பெறுனர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படும்.


மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்களின் வழிகாட்டலின் கீழ் குறித்த கிராம சேவையாளர்கள் நன்மை பெறுனர்களின் வீடுகளுக்கே சென்று கொடுப்பனவுகளை வழங்குவர். கொடுப்பனவு வழங்குதல் 2020 மே 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மே 15ஆம் திகதி நிறைவு செய்யப்படவுள்ளது.


பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்வின் தலைமையில் நேற்று (04) இடம் பெற்ற கலந்துரையாடலில் பின்வருமாறு கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டது.