வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் ஒருவருக்கு கொரோனா..!

0

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரொன வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 200 ற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களிற்கு கோரோனோ தொற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.


இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.


வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள குறித்த முகாமிற்கு கடற்படை உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 216 பேர் அண்மையில் கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் அங்கு தங்கவைக்கப் பட்டிப்பவர்களிற்கான பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றது.


குறித்த பரிசோதனையில் செவனகலையை சேர்ந்த வெலிசறை கடற்படை வீரர் ஒருவரின் தந்தையாருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.