பிரதமர் மகிந்தவின் கூட்டத்தை புளொட் புறக்கணிப்பு; கூட்டமைப்பு ஆதரவு..!

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் தற்போது அலரி மாளிகையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம் பிக்கள் கலந்து கொண்டுள்ளனர்.


சித்தார்த்தன் , சாந்தி ஆகிய இருவரை தவிர ஏனைய அனைத்துக் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.


முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ,முன்னாள் எம் பி வசந்த சேனநாயக்க உட்பட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.


பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பில் இங்கு வலியுறுத்தப்பட்டு வருகின்றது.


சற்று முன்னர் சார்ள்ஸ் நிர்மலநாதன் உரையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.