வெளிச்சம் அறக்கட்டளையால் சிறுவர்களுக்கான பால்மா, சத்துணவு வழங்கி வைப்பு..!

0

இலண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் நிதியின் ஊடாக Covid19 தொற்றால் தொழிலின்றி அன்றாட வருமானமிழந்து ஒரு வேளை உணவுக்கே அல்லல்படும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் போசாக்கை மேம்படுத்தும் பொருட்டு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.


 

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தின் இரண்டு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் கிராம சேவையாளர் பிரிவிலும் செட்டிக்குள பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கங்கன்குளம் போன்ற கிராமங்களில் உள்ள 50 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தேவையான 02பெட்டி பால்மா மற்றும் 01பை சமபோஷா போன்ற பொருட்களை கொண்ட போசாக்கு பொதிகள் வெளிச்சம் அறக்கட்டளையின் ஊடாக மூன்று கட்டங்களாக வழங்கப்பட்டது.


இவ் உதவியினை வழங்குவதற்கு பண உதவியினை இலண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் தலைவர், நிர்வாக சபை உறுப்பினர்கள் வழங்கி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.