தற்போதைக்கு விருப்பு இலக்கம் வழங்கப்பட மாட்டாது – மகிந்த தேசப்பிரிய

0

ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்தக் கூடிய நிலைமைகள் இப் போதைக்கு இல்லை. ஆனாலும் நிலைமை சீராகின்றதா என்பதை பொறுத்துப் பார்க்க வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன்.

தேர்தலை நடத்த தேர்தல் உத்தியோகத்தர்களின் சுகாதார பாதுகாப்பு உட்பட்ட பல விடயங்களையும் ஆராய வேண்டியுள்ளது.

இவ்வாறு இன்று பிற்பகல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசும் போது தெரிவித்த தேர்தல் ஆணைக் குழுவின் தனலவர் மஹிந்த தேசப்பிரிய,

இன்றைய சந்திப்பில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், தேர்தல் இப் போதைக்கு வைக்கும் நிலைமை இல்லை என்பதனையும் சுட்டிக் காட்டினர்.

இதனால் இப்போதைக்கு விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.