சகல பொலிசாரினதும் விடுமுறை மற்றும் நாளாந்த ஓய்வு இரத்து..!

0

சகல பொலிசாரினதும் விடுமுறை மற்றும் நாளாந்த ஓய்வு இரத்து எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு பதில் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரட்னவினால், சகல சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்கள் ,பிரதி பொலிஸ் மா அதிபர்கள் ,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில் விடுமுறை இரத்து காலம் எதிர்வரும் 15ஆம் வரை நீடிக்கப் பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.