பாடசாலை மாணவியான தனது மகளை இரும்புக் கம்பியால் தாக்கிய தந்தை கைது..!

0

மகளை அலுமினிய கம்பியால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் ஒன்று மட்டக் களப்பில் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந் துறைச்சேனை பகுதியில் தந்தையொருவர் தனது ஒன்பது (09) வயது மகளை கம்பியால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.


இச் சம்பவம் தொடர்பில் ஆரம்பக் கட்ட விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தந்தையைக் கைது செய்து வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட போது எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் நேற்று (29.04.2020) மாலை உத்தரவிட்டுள்ளார்.


வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் இரண்டு சகோதரர்கள் சண்டை பிடித்த போது பிள்ளைகளின் தந்தை தனது ஒன்பது வயது மகளை அலுமினியம் கம்பியால் தாக்கியதில் சிறுமிக்கு தலையில் ஏற்பட்ட காயத்துடன் வாழைச்சேனை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


மகளை தாக்கிய குற்றச்சாடடில் தந்தை வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதற்கு இணங்க எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கொரோனா காரணமாக சிறுவர்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் அதிகரித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.