இந்தியாவில் கொரோனா 33 ஆயிரத்தை கடந்தது; பலி எண்ணிக்கை 1074 ஆக உயர்வு..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1074 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இதனால் கொரோனா அதிவேகமாக பரவுவது கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது.


இந் நிலையில் மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 33050 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த 24 மணி நேரத்தில் 1718 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப் பட்டுள்ளது. 67 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதன் மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1074 ஆக உயர்ந்துள்ளது. 8325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.