முன்னணியின் குறுகிய அரசியலை பகிரங்கப்படுத்திய அமைச்சர் டக்ளஸ்..!

0

நாடாளாவிய ரீதியில் படைத் தரப்பினர் மத்தியில் சமூக இடைவெளியை பேணுவதற்காகவே பொருத்தமான பாடசாலைகள் உட்பட பொது கட்டிடங்கள் அடையாளப் படுத்தப்பட்டு வருவதாகவும்,

அவ்வாறு அடையாளப் படுத்தப்படுகின்ற பாடசாலைகள் போன்ற பொதுக் கட்டிடங்களில் கொரோனா ரைவஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தங்க வைக்கப்பட மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு உறுதியளிக்கப் பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து ஈ.பி.டி.பி வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

நாடாளாவிய ரீதியில் படைத் தரப்பினரினால் பொது கட்டிடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று (29) அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்குறிப்பிட்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட முறையில் அரசாங்கத்தினால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்ற ஊடங்கு சட்டம் காரணமாக கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் துரதிஸ்டவசமாக எதிர்காலத்தில் சமூகப் பரவலாக மாற்றமடையுமாயின் ஒவ்வொரு பிரதேசத்திலும் வைத்திய சாலைகளில் ஏற்படக் கூடிய இடப்பற்றாக் குறையை சமாளிப்பதற்கான முன் ஏற்பாடாகவும் குறித்த கட்டடிங்கள் அடையாளப் படுத்தப்பட்டு தயார் படுத்தப்படுவதாகவும் தெரிவித்த அவர்,

எந்தவொரு சூழ்நிலையிலும் பிற மாவட்டங்களில் இருந்து எந்தவொரு மாவட்டத்திற்கும் நோயாளர்கள் மாற்றப்பட மாட்டார்கள் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பொதுக் கட்டிடங்கள் பர்துகாப்பு தரப்பினரினால் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

தமிழர் பிரதேசங்களில் கொரோனா வைரஸை பரப்பும் நோக்கில் திட்டமிட்ட முறையில் அரசாங்கத்தினால் தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக குறுகிய நலன் கொண்ட தமிழ் அரசியல் தரப்புகளினால் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சில பிரதேசங்களில் மக்களை வீதிக்கு இறக்கி தேவையற்ற பதற்றத்தினையும் ஏற்படுத்தி வருகின்றமைக்கு தன்னுடைய கவலையையும் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை அண்மையில் முன்னணியின் ஏற்பாட்டில் கோப்பாய் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டன என்பது தொடர்பில் சமூக வலைத் தளங்களில் படங்கள் மற்றும் அது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகய செயற்பாடுகள் கொரோனா அச்சம் உள்ள நிலையில் சமூகங்களுக்கு இடையிலும் பாதுகாப்பு தரப்பினர்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.