நாளை 30 வரை அமுலில் உள்ள ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரத்தின் காலம் நீடிப்பு..!

0

நாளை வரையில் அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டஊரடங்கு அனுமதிப் பத்திரத்தின் கால எல்லை மே மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

இதனை பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


இதேவேளை கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படும்.


அதேவேளை, நாளை இரவு நடைமுறைப் படுத்தப்படும் ஊரடங்கு நாடளாவிய ரீதியாக மே மாதம் 4 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.