வவுனியாவில் கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று; மூடப்பட்டது அரச நிறுவனம்..!

0

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வவுனியா மாவட்ட அலுவலகத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் அண்மையில் உறுதிப் படுத்தபட்டிருந்தது.


இந்நிலையில் குறித்த கடற்படை வீரரின் உறவினர் ஒருவர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வவுனியா அலுவலகத்தில் கடமை புரிந்து வருகிறார்.

அவர் தனது உறவினரான கடற்படை வீரருடன் தொடர்பினை பேணியிருந்ததுடன், கடமை நிமித்தம் தனது அலுவலகத்துக்கும் சமூகமளித்துள்ளார்.


இதனையடுத்து குறித்த அலுவலகத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஊழியரின் இரத்த மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக அனுப்பபட்டுள்ளது.


அதன் முடிவுகள் கிடைக்கபெற்ற பின்னர் அலுவலகத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.