கொலைகாரர்களின் கூடாரமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாறியுள்ளது..!

0

கடந்த 28 ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய தர்மரத்தினம் சிவராம் (மாமனிதர் தராகி) அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி வவுனியாவில் இடம் பெற்றது.

வவுனியாவில் ஆயிரத்து நூற்று ஐம்பது நாட்கள் கடந்தும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.


ஏ9 வீதிக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள தமது போராட்டப் பந்தலில் இன்று (29) புதன் கிழமை 1167 ஆவது போராட்ட நாளில், மாமனிதர் தராகியின் உருவப்படத்தை காட்சிப்படுத்தி மெழுகுவர்த்திகள் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


இங்கு காட்சிப் படுத்தப்பட்ட சுலோகங்களில் ” கூட்டமைப்பை உருவாக்க மூளையாகச் செயற்பட்ட தராகியை படுகொலை செய்தவர்களை இணைத்து கொலைகாரர்களின் கூடாரமாக கூட்டமைப்பு மாறியுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒரு ஆளுமை மிக்க ஊடகவியலாளரை ஊடக உலகம் இழந்துள்ளதுடன் அன்னாரின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது என்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாமும் எமது அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.