இலங்கையில் கொரோனா அச்சத்திற்கு மத்தியில் வேகமாகப் பரவும் எலிக் காய்ச்சல்..!

0

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் பின்னணியில், எலிக் காய்ச்சல் நோயும், வேகமாகப் பரவி வருவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

எலிக் காய்ச்சல் காரணமாக, வைத்திய சாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் வெலிசறை கடற்படை லெப்டினன் கொமாண்டர் ஒருவர் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்தார்.


இந்நிலையில் எலிக் காய்ச்சல் நிலைமை குறித்து, சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தகவல்களின் படி, இதுவரை இவ் வருடத்தில் 1352 எலிக் காய்ச்சல் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.


கடந்த ஜனவரி மாதம் 665 எலிக் காய்ச்சல் தொற்றாளர்களும், பெப்ர்வரி மாதம் 453 தொற்றாளர்களும், மார்ச் மாதம் 188 தொற்றாளர்களும், ஏப்ரல் மாதத்தில் இதுவரை 45 எலிக் காய்ச்சல் தொற்றாளர்களும் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.


இதில் அதிகமான எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் இவ்வருடம் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள எலிக் காய்ச்சல் தொற்றாளர்கள் எண்ணிக்கை 273 என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை அண்மையில் சீனாவில் கொரோனாவிற்குப் பின்னர் பரவிய ஹண்டா எனப்படும் எலிக் காய்ச்சல் காரணமாக ஒருவர பலியானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.