அடகு வைக்கப்படும் தங்க நகைகளுக்கு 12% வருட வட்டியை அறவிடுமாறு உத்தரவு..!

0

தங்க நகைகள் அடகு வைக்கப்படும் போது அனுமதி பெற்ற வங்கிகளினால் அறவீடு செய்யப்படும் வட்டி வீதத்தை குறைக்குமாறு இலங்கை மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.

தற்பொழுது வங்கிகளினால் தங்க நகை அடகு வைக்கப்படும் போது 12 முதல் 17.5 வீத ஆண்டு வட்டி வரையில் அறவீடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு வட்டி வீதத்தை குறைப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதன்படி, உடன் அமுலுக்கு வரும் வகையில் வங்கிகளில் தங்க நகை அடகு வைக்கப்படும் போது அதிகபட்சமாக, 12 வீத ஆண்டு வட்டியை அறவீடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.


புதிதாக தங்க நகை அடகு வைக்கப்பட்டாலும் ஏற்கனவே அடகு வைக்கப்பட்டு அவற்றை மீள புதுப்பிக்கும் போதும் இந்த புதிய வட்டி வீதம் அமுலாகும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஏனைய நிதி நிறுவனங்களும் தங்க நகை அடகு முற்பணம் வழங்கும் போது குறைந்தளவு வட்டியை அறவீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.