கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 567 ஆக அதிகரிப்பு; வவுனியா முடக்கப்படும் சாத்தியம்..!

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 557 இலிருந்து 567 ஆக உயர்வடைந்துள்ளது.


இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 126 ஆகும். அதேவேளை இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.


அதேவேளை கொரோனா நோயாளியாகிய கடற்படை சிப்பாய் ஒருவர் வவுனியாவிற்கு வருகை தந்தமையால் வவுனியாவின் மகா கச்சக்கொடி பிரதேசம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா முழுவதும் எதிர்வரும் 30ம் திகதி வரை முழுமையாக முடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.


எனவே நாம் ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புடன் செயற்படுவோமாயின் கொரோனாவில் இருந்து எமது சமூகத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். தவறின் அனைவரும் ஒன்றாக அழிய வேண்டிய நிலை வரும் என்பதை உணர்ந்து செயற்படுவோம்.