இலங்கை விமானப் படைக்குள்ளும் ஊடுருவிய கொரோனா; அதிர்ச்சியில் அரசாங்கம்..!

0

இலங்கை விமானப் படை பாண்ட் பிரிவின் சிப்பாய் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு ஐ டி எச் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சிப்பாயுடன் நெருக்கமாக பழகியவர்கள் தனிமைப் படுத்தப்படவுள்ளனர்.


இதேவேளை இந்த சிப்பாய் கொழும்பில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிலையமொன்றின் நிகழ்ச்சிக்காக வந்து சென்றுள்ளதால் அந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் குறித்தும் சுகாதார பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தியுள்ளது.


ஏற்கனவே கடற்படை, இராணுவம் , பொலிஸ் துறைகளுக்குள் ஊடுருவிய கொரோனா வைரஸ் இப்போது விமானப் படைக்குள்ளும் பரவ ஆரம்பித்துள்ளமை பாதுகாப்புத் தரப்பினரையும் அரசையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.