யாழில் கபினற் அமைச்சர் இருந்தும் மக்கள் வாழும் பகுதியில் தனிமைப்படுத்தல் முகாம்..!

0

ஸ்ரீலங்காவில் அதிகரித்துச் செல்லும் கொரோனா அச்சம் காரணமாக விடுமுறையில் சென்று திரும்பிய இராணுவ வீரர்களை தனிமை படுத்துவதற்காக கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி இராணுவத்தினரால் கையகப் படுத்தப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். கோப்பாய் பகுதியில் மக்கள் செறிந்து வாழ்கின்ற இடத்தில் இவ்வாறு தனிமைப்படுத்தல் முகாமினை அமைப்பதற்கு தமது எதிர்ப்பினை வெளியிட்ட பொது மக்கள் இதனை அகற்றுவதற்கு அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தென்பகுதியில் தொற்று வீதம் அதிகரித்துள்ளது. இதனால் முப்படையினரையும் கடமைக்கு திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ள நிலையில் இருந்து விடுமுறைக்காக தென் பகுதிகளுக்கு சென்ற கோப்பாய் பிரதேசத்தில் கடமையாற்றிய இராணுவ வீரர்கள் மீளவும் படை முகாமுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.


இதனால் அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரிக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

முதற் கட்டமாக இன்று மாலை 45 பேர் அழைத்து வரப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை வடகிழக்கில் உள்ள ஒரே ஒரு சிரேஸ்ர அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.