கோட்டா அரசின் அமைச்சர் உட்பட மூன்று முக்கியஸ்தர்கள் தனிமைப் படுத்தப்படலாம்..!

0

கோட்டாபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மூன்று முக்கியஸ்தர்கள் தனிமைப் படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க மற்றும் கடற்படை தளபதி ரியல் அட்மிரல் பியல் டி சில்வா ஆகிய மூவரே இவ்வாறு தனிமைப்படுத்தப் படவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்திய சாலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் மேற்படி மூவரும் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த நிகழ்வில் , வெலிசர கடற்படை முகாமை சேர்ந்த கடற்படை அதிகாரி பங்கேற்றிருந்தார்.


இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டால், குறித்த மூவரும் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்பதுடன், அந்த விழாவுக்கு சென்ற சகலரும் தனிமைப் படுத்தப்படுவார்கள் எனவும் உயர் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.