கொரோனா அச்சம்; சிறைச் சாலை உத்தியோகத்தர் வைத்திய சாலையில் அனுமதி..!

0

கொரோனா தொற்று அச்சம் காரணமாக வவுனியா சிறைச் சாலை உத்தியோகத்தர் ஒருவர் வவுனியா பொது வைத்திய சாலையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் வவுனியா சிறைச் சாலையில் கடமை புரிந்த குறித்த நபரை சிறைச் சாலை உத்தியோகத்தர்கள் வவுனியா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.


குறித்த நபரை வவுனியா பொது வைத்திய சாலையில் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதுடன், கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிவதற்காக இரத்த மாதிரிகள் பெறப்பட்டு அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இரத்த மாதிரி பெறுபேறு வந்த பின்னரே கொரோனா தொற்று உள்ளதா என்பதை தெரிவிக்க முடியும் என வைத்திய சாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, குறித்த நபர் நோய் தொற்று இருந்த பகுதியில் இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.