சீதுவ இராணுவ முகாம் கப்டனுக்கு கொரோனா; வெலிசர கடற்படை முகாமில் சிப்பாய் பலி..!

0

சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் கப்டன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்து அந்த படை முகாம் இன்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது

அவருடன் தொடர்புபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிப்பாய்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.

இவரின் மனைவி வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் இவருக்கும் தொற்று இருக்கக் காணப்பட்டது.

தொற்றுடன் இவர் பலருடன் பழகியிருக்கலாம் என்பதால் அதனை பொலிஸ் ஆராய்ந்து வருகிறது .

இதேவேளை வெலிசர கடற்படை முகாமின் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவில்லை.

ஏற்கனவே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவருக்கு தொற்று இருந்திருக்க வில்லையெனவும் , குறித்த மரணம் குறித்து ஆராயப்பட்டு முறையான தகவல் பின்னர் வெளியிடப்படுமெனவும் கடற்படைப் பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.