வவுனியாவில் மான், பன்றி இறைச்சியுடன் மூவர் கைது..!

0

வவுனியா கூமாங்குளம் பிரதேசத்தில் மான் மற்றும் பன்றி இறைச்சியினை உடமையில் வைத்திருந்த மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வவுனியா பிராந்திய போதைத் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கமைய இன்றைய தினம் கூமாங்குளம் பகுதியில் சோதனை மேற்கொண்ட பொலிசார் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ காட்டு பன்றி மற்றும் 10 கிலோ மான் இறைச்சியை மீட்டதுடன்,


அதனை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றசாட்டில் மூவரை கைது செய்துள்ளனர்.


வவுனியா பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.