யாழில் கொரோனா பீதியிலும் விபச்சாரம்; இரு பெண்கள் உட்பட மூவர் கைது..!

0

யாழ் மாநகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று இரவு கலாசார சீரழிவு இடம் பெற்று வந்த நிலையில் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த இரு பெண்களையும் ஆண் ஒருவரையும் பொலிஸார் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அந்த வீட்டில் தனிமைப் படுத்தியுள்ளனர்.


யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் மனோகரா தியேட்டருக்கு அண்மையாக உள்ள வீடொன்றிலேயே அண்மைக் காலமாக கலாசார சீரழிவு இடம் பெற்று வந்த நிலையில் அயலவர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து குறித்த வீட்டை இன்று இரவு 7.45 மணியளவில் சுற்றி வளைத்த பொலிஸார், அங்கிருந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரையும் விசாரணைக்கு உள்படுத்தியதுடன் அங்கு விடுதி நடத்தி வந்தவரையும் விசாரணை செய்துள்ளனர்.


விசாரணைகளின் போது சந்தேக நபர்கள் முன்னுக்கு பின் முராண தகவல்களை வழங்கியதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து நாளைய தினம் அவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.