இங்கிலாந்தின் குழந்தைகளுக்கான வைத்திய நிபுணர் விஷ்னா கொரோனாவால் பலி..!

0

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் மருத்துவமனையில் மருத்துவத் துறை நிபுணராக பணிபுரிந்து வந்த, விஷ்னா இராசையா (42) கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்.


விஷனா என்று எல்லோராலும் அறியப்பட்ட இவர் குழந்தைகளுக்கான வைத்திய நிபுணராவார்.


குறைப் பிரசவ குழந்தைகளை கவனித்து அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பதில் நிபுணத்துவம் பெற்ற இவரின் இழப்பிற்கு வைத்திய சாலை நிர்வாகம் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.


“எங்கள் அன்பான விஷை இழந்ததில் நாங்கள் தனிமையடைந்துள்ளோம். குடும்பமே அவரது முழு உலகம்” என்று அவரின் மகள் கெட்லின் தெரிவித்துள்ளார்.