வெலிசர கடற்படை முகாமில் 70 பேருக்கு கொரோனா; 400 பேருக்கு இன்று பரிசோதனை..!

0

இலங்கை கடற் படையின் வெலிசர முகாமில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 70 சிப்பாய்கள் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து, அந்த முகாமில் உள்ள அனைத்து சிப்பாய்களையும் கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பாதுகாப்பமைச்சு தீர்மானித்துள்ளது.


இதன்படி நாலாயிரம் சிப்பாய்கள் பி சி ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் படவுள்ளனர். ஒரே இடத்தில் கூடுதல் எண்ணிக்கையாளருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுவது இது முதற் தடவையாகும். இதன் முதற் கட்டமாக 400 பேருக்கு இன்று சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.


ஏற்கனவே இரண்டு தினங்களுக்கு முன்னர் பேலியகொடை மத்திய மீன் சந்தையில் 549 பேருக்கு இப்படியான சோதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் வெலிசர கடற்படை முகாமில் உள்ள சிப்பாய்கள் பெரும்பான்மையானோர் நேற்று முதல் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.


இதேவேளை இவர்கள் கடமை புரிந்த இடங்கள், சென்று வந்த இடங்கள், முகாமைச் சூழ உள்ள இடங்கள் தொடர்பிலும் அரசு கூடிய கவனம் செலுத்த முன்வர வேண்டும்.