வீதியில் வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து முதியவர் பலி; வவுனியாவில் சம்பவம்..!

0

வவுனியா, பாரதிபுரம் பகுதியில் நீர்பாசன நடவடிக்கைக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

நேற்று (24) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, பாரதிபுரம் வீதியில் தற்காலிகமாக வசிக்கும் முதியவர் ஒருவர் வீட்டில் இருந்து இரவு தங்குவதற்காக கற்பகபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.


அதன் போது மன்னார் பிரதான வீதிக்கு அண்மித்ததாக பாரதிபுரம் வீதியின் ஓரமாக பேராறு நீர்பாசன நடவடிக்கைக்காக வெட்டப்பட்ட குழி ஒன்றில் துவிச்சக்கர வண்டியுடன் வீழ்ந்து, குழியில் இருந்த நீரில் மூழ்கி மரண மடைந்துள்ளார்.

இன்று (25.04.2020) காலை வீதியால் சென்றவர்கள் குறித்த குழியில் ஒருவர் வீழ்ந்து இறந்து கிடப்பதை அவதானித்து வவுனியா பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


இதில் ஜெயபத்ம புலேந்திரன் என்ற 68 வயதுடைய முதியவரே மரண மடைந்தவராவார்.

நீர்ப்பாசன வடிகாலமைப்புச் சபையின் பொறுப்பற்ற நடவடிக்கையே இந்த அசம்பாவிதம் இடம்பெற காரணம் என தெரிவிக்கப்படுகிறது.


அதேவேளை குறித்த நீர்ப்பாசனத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வவுனியாவின் பல பகுதிகளின் வீதிகள் சேதமாக்கப்பட்டுள்ளன, இதனால் இவ்வாறான பல விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.