பாடசாலைகளில் கொரோனா சந்தேக நபர்களை தங்க வைக்க இரகசிய முயற்சி..!

0

வவுனியா மாவட்டத்தின் பல கிராமப் புறப் பாடசாலைகளில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த கொரோனா தொற்று சந்தேக நபர்களை தனிமைப் படுத்தலுக்காக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் பொறிக்கு தகவல்கள் கசிந்துள்ளன.

அந்த வகையில் கந்தபுரம், கூமாங்குளம், சுந்தரபுரம், பூந்தோட்டம், மகாறம்பைக் குளம், ஓமந்தை போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.


அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வட பகுதி மக்கள் சொல்லணா துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில் குறித்த செயற்பாடானது குறித்த பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைப்பதாகவே அமையும்.

அத்துடன் குறித்த பாடசாலைகள் குடிநீர், மின்சாரம், மலசலகூட வசதிகள் உட்பட பல வளப் பற்றாக்குறைவுடன் கிராமங்களின் மத்தியில் அமைந்துள்ளமையால் பாரிய சுகாதார பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.


எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள தேசிய அனர்த்தமாக கொரோனா காணப்படுவதால் வவுனியாவில் தங்க வைக்கக் கூடாது என மறுக்க முடியாது.


எனவே மக்களில் இருந்து ஒதுங்கி சகல வசதிகளுடன் காணப்படும் ஈரற்பெரிய குளத்தில் அமைந்துள்ள பரக்கும் மகா வித்தியாலயம், மடுக்கந்த மகா வித்தியாலயம், காமினி மகா வித்தியாலயம் என்பன பொருத்தமாகக் காணப்படுகின்றது.


மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் ஒரு சில அசியல்வாதிகளுக்கு தெரிந்துள்ள போதும் நளுவல் போக்கையே கடைப் பிடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.