மக்களே அவதானம்; நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் இரு நாட்களிற்கு தொடர் ஊரடங்கு..!

0

இன்று இரவு 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களையும் அலவத்து கொட, வரக்காபொல மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளையும் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் இன்று 8 மணிக்கு பிறப்பிக்கப்படவுள்ளது.


இன்று இரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்படுகின்ற ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கே தளர்த்தப்படவுள்ளது.

குறித்த மாவட்டங்களுக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வௌியேறவும் அனைவருக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


எனவே இவ் விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.