நான்காயிரம் கடற்படைச் சிப்பாய்களின் குடும்பங்கள் தனிமைப் படுத்தப்பட்டன..!

0

வெலிசர கடற்படை முகாமில் முப்பதிற்கும் மேற்பட்ட சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று காணப்பட்டதையடுத்து அந்த முகாமைச் சார்ந்த 4000 சிப்பாய்களும் அவர்களின் குடும்பங்களும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

அதேபோல முகாமுக்குள் இருக்கும் 150 விடுதிகளில் உள்ளோரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதேவேளை கடற்படையின் சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறித்து யாரும் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லையென்று இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது.