புனித ரமழான் நோன்பு நாளை மறுநாள் சனிக் கிழமை ஆரம்பம்..!

0

புனித ரமழான் நோன்பு நாளை மறுநாள் சனிக்கிழமை ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

ஹிஜ்ரி 1441 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.


இம் மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகிய அமைப்புக்களில் இருந்து குறிப்பிட்ட சிலர் கலந்து கொண்டிருந்தனர்.


இதன் போது நாட்டின் எப்பிரதேசத்திலும் ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டமைக்கான ஆதார பூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை.


எனவே ஷஹ்பான் மாதத்தை 30 ஆக பூரணப்படுத்தி நாளை மறுநாள் சனிக் கிழமை புனித நோன்பு ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.